Sunday 15 November 2009

ஏனுங்கங்கங்கங்க....என்னதான் நடக்கின்றது.... நம்மைச் சுற்றி!!!!!!!

மனிதமனங்களை புரிந்துகொள்ளும் முனைப்புகளில்லாத மானிட வாழ்க்கையின் ஓர் மங்கிய புள்ளியில் நாம் இன்று பயணிக்கின்றோமா?

உணர்வுகள் என்றால் என்னவெனும் ஓர் கேள்வியற்ற சூனியத்துள் நாம் தொலைந்து போய்விட்டதாய் தோன்றுகின்றது!

மனிதம் என்ற வார்த்தைகள் வெறும் பேச்சுக்காக மட்டுமே உயிர்த்துள்ளது போலுள்ளது!

தாம் சொல்வதெல்லாம் சரியென்றும், தாமே முற்றும் உணர்ந்த முதல்வனென்றும், தாமே உலகில் எல்லாவற்றையும் கற்றுத் தெளிந்த அறிஞ்சனென்றும் உளறும் பலரின் இல்லாத இடத்துக்கு இலக்கு வைக்கும் நடவடிக்கை, இயந்திரத்தனமா இல்லை இறுமாப்புத்தனமா?

தேவைகள் யாருக்கும் உண்டு. தேவைகள் மட்டுமே ஓர் தேடுதலாக மாறிவிட்ட நிலையே தேவையென்று தேடிச்செல்வது தேவையா என தோன்றுகின்றது!

இரக்கமில்லா பகல்களும், உறக்கமில்லா இரவுகளும், கடந்து போன காலங்களும், இழந்து போன நேரங்களும், பணம் என்ற காகித உறைக்குள் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்ட மாயம் மனிதனிடம் மட்டும் தொற்றிவிட்துதான் பாவம்!

உனக்குள் நீ? ஆனால் உண்மையில் யார் நீ?

மட்டுப்படுத்தப்பட்ட மனநிலைகள் மாற வேண்டும்! நாம் தொலைத்த பலவைகளை மீண்டும் தேட வேண்டும்!!!

இதல்லாம் எதுக்கு இப்போ என்கின்றீர்களா?

எல்லாம் ‘இலைமறை‘ங்கிறதுக்கு ஒரு முகவுரைதான். கொஞ்சமாவது பேசித்தானே ஆகணும். ஏன்னா சட்டியில மூடி வச்சுட்டா முட்டையில இருந்து குஞ்சு வந்திடுமா? உள்ளத ஒளிச்சு வச்சிட்டா, இல்லாதது உள்ளதாயிடுமா? (எப்பூடி... பொன்மொழி) - ஏது சகிக்கலயா... இட்ஸ் ஓகே... லெட்ஸ் contiநியூவலாம்....

முட்டையோ, குஞ்சோ, உள்ளதோ, இல்லதோ...... ஆனா எல்லாவற்றுக்கும் பொதுவாக ஒரே ஒரு கொஸ்சனுங்க....

அதாவதுங்கங்கங்க............... 'இலை காயை மறைத்துள்ளதா அல்லது இலையில் காய் மறைந்துள்ளதா?

இப்போ மைல்டா புரிஞ்சிருக்குமே ‘இலைமறை‘ என்கின்ற தலைப்பின் உள்ளடக்கம்!!!

வாங்க பழகலாம்........